நிமிடத்திற்கு நிமிடம் ஆபத்தாகும் இஸ்ரேல் – ஈரானின் கள முனைகள்

ஈரான் அணுவாயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் கடந்த நாட்களில் மிகப் பெரிய தாக்குதலை மேற்கொண்டது.

ஈரானின் இராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள், இராணுவத் தலங்கள், அணுசக்தித் தலங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

அதையடுத்து இருதரப்பும் பதிலுக்குப் பதில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

குறிப்பாக இஸ்‌ரேலின் டெல் அவிவ், ஜெருசலம் ஆகிய நகரங்களை பாரிய சத்தத்துடன் ஈரான் ஏவுகணைகள் இன்று தாக்கியுள்ளன.

இந்தநிலையில் குறித்த தாக்குதல்கள் வருகின்ற நாட்களில் இன்னும் வீரியம் பெறப் போகின்றன. இவை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தே ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இஸ்ரேல் – ஈரான் களமுனைகள் மத்திய கிழக்கு வட்டத்தில் எவ்வாறான அசாதாரண நிலையை உருவாக்கப் போகின்றன என்பதை இரவு நேரங்களில் தான் காத்திருந்து பார்க்க வேண்டும் என கனடாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் நேருகுணரட்னம் தெரிவித்துள்ளார்.