திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளியில் வேலைவாய்ப்பு ஆதரவு அலகு நிறுவுதல்

-கிண்ணியா நிருபர்-

சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் சமூக சேவைகள் திணைக்களம், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் JICA உடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஆதரவு பிரிவு ஒன்று குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக் அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை குச்சவெளி பிரதேச செயலகத்தில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எதிர்காலத்தில், இந்த பிரிவு ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் அவர்களின் கல்வி மற்றும் தொழில் திறன்களைக் கருத்தில் கொண்டு பொருத்தமான வேலை வாய்ப்புகளை வழங்க உதவியாக இருக்கும்.

இந்த நிகழ்வில் மாவட்ட சமூக சேவைகள் ஒருங்கிணைப்பாளர் தவராசா பிரணவன் சமூக சேவைகள் மேம்பாட்டு அலுவலர் எம்.குகதாசன் மற்றும் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.