தேர்தலுக்கு முன் தேசிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் மட்டுமே நல்லவர்கள் ஏனைய கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என ஜனாதிபதி தெரிவித்தார்.
தேர்தலுக்கு பின் ஏனைய கட்சிகளில் உள்ள நல்லவர்களை இணைத்து ஆட்சி அமைப்போம் என கூறுகின்றனர்.
தேர்தலுக்கு முன் கெட்டவர்களாக இருந்தவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவிப்பத்தால் நல்லவர்களாக சலவை செய்யப்படுகின்றனர்.
ஆகவே இனி தேசிய மக்கள் சக்தி என்ற பெயரை தேசிய சலவை சக்தி என மாற்ற வேண்டும் என நேற்று புதன் கிழமை பாராளுமன்ற உரையின் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
