தவறவிடப்பட்ட கைப்பையை எடுத்துச் சென்ற பெண்ணை வலைவீசி தேடும் பொலிஸார்!

-யாழ் நிருபர்-

கடந்த 18ஆம் திகதி யாழில் உள்ள புடவையகம் ஒன்றுக்கு சென்ற பெண்ணொருவர், அங்கு தனது கைப்பையை மறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார்.

அந்த கைப்பையில், ஒருதொகை பணம், கைபேசி மற்றும் தன்னியக்க இயந்திர அட்டை (ATM card) என்பன உள்ளதாக அந்த பெண் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில்,  தவறவிடப்பட்ட குறித்த கைப்பையை வேறு பெண்ணொருவர் எடுத்து செல்வது அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த கைப்பையை எடுத்துச் சென்ற பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர்.