மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இனிகொடவெல ரயில் கடவையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இன்று புதன் கிழமை காலை விபத்து ஏற்பட்டுள்ளது.
இனிகொடவெல ரயில் கடவை வழியாக ரயில் பயணித்த நிலையில் குறித்த ரயில் கடவையில் இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. இதன்போது கொள்கலன் வாகனம் தரித்து நின்ற வேன் மீது மோதியது இதனையடுத்து வேன் முன்னாள் தரித்து நின்ற எரிபொருள் பவுசர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஏழு பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் வேன் பலத்த சேதமடைந்துள்ளதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.