ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் நடந்த ஊழல் : விசாரிக்க ஜனாதிபதி குழுவை நியமித்தார்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் ஏற்பட்டுள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகமே இந்தக் குழுவை வழிநடத்தும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதில் விமான நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு மற்றும் அனைத்து இணைந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் ஒன்றுகூடினர். நான்கு மணி நேரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் தேசிய விமான நிறுவனத்திற்கு நிலையான எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியது.

நஷ்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தை மறுசீரமைப்பதில் கூட்டுப் பொறுப்பின் அவசரத் தேவையை ஜனாதிபதி திசாநாயக்க வலியுறுத்தினார