தென் மாகாண கூட்டுறவு ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட 9 பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள்!
மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள 9 பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், தென் மாகாண கூட்டுறவு ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த சங்கங்களின் 3 வருடப் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னரும் திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்படாமையும், சட்டத்திற்குப் புறம்பாக அதனை நடத்திச் சென்றமையும் இதற்குக் காரணம் என, தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, வெலிகம, தெவிநுவர, திக்வெல்ல, பெரலபனாதர, கொட்டபொல, கம்புருபிட்டிய, ஹக்மன, பெலியத்த மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளிலுள்ள பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.