கொழும்பில் துசிதவை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு
தேசிய லொட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லோலுவாவை குறிவைத்து இன்று சனிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
நாரஹேன்பிட்டவில் அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் தாக்குதலை நடத்தியதாகவும், ஹல்லோலுவாவின் காரும் சேதமடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற போது ஹல்லோலு வாகனத்திற்குள் இருந்ததாக கூறப்படுகிறது, ஆனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிசாரின் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹல்லோலுவாவைத் தாக்கிய பின்னர், மோட்டார் சைக்கிளில் வந்த தாக்குதல்தாரிகள் முக்கியமான காரிற்குள் இருந்த முக்கிய ஆவணங்கள் அடங்கிய கோப்பை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.