விமான நிலையத்தில் வர்த்தகர்கள் இருவர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரும் கண்டி, ரம்புக்வெல்லவைச் சேர்ந்த 46 வயதுடைய உள்ளூர் வணிகர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாகன உதிரி பாகங்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 210 மில்லியன் மதிப்புள்ள 6.7 கிலோகிராம் எடையுடைய தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும், தங்கக் கையிருப்பும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.