தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து கெப் வண்டி விபத்து 2 பேர் படுகாயம்
தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து கெப் வண்டி விபத்து
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பழங்களுடன் பயணித்த கெப் வண்டி இன்று வெள்ளிக்கிழமை 50 அடி ஆழத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் கெப் வண்டியின் சாரதியும் கெப் வண்டியில் பயணித்த ஒருவரும் காயமடைந்து வட்டவளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பகுதியில் பழங்களை கொள்வனவு செய்து கொழும்புக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும்போது பாதையை விட்டு விலகிய கெப் வண்டி இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெற்ற நேரத்தில் கெப் வண்டியில் நான்கு பேர் பயணித்ததாக விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.