டிக்டொக் நேரலையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட டிக்டொக் பிரபலம்!
மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் டிக் டொக் பிரபலமான 23 வயது இளம் பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை ஜாலிஸ்கோவில் உள்ள அழகு நிலையத்தில் வலேரியா மார்க்வெஸ் என்ற குறித்த யுவதி டிக்டொக் நேரலை செய்து கொண்டிருக்கும் போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
டிக்டொக்’கில் 113,000 பின்தொடர்பவர்களை கொண்ட வலேரியா மார்க்வெஸ் தான் பணிபுரியும் குறித்த அழகு நிலையத்தில் இருந்து நேரலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த அழகு நிலையத்திகுள் நுழைந்த ஆண் ஒருவர் வலேரியாவிடம் சென்று ” நீ தான் வலேரியவா? என்று கேட்டுள்ளார் அதற்கு வலேரியா “ஆம் ” என்று பதிலளித்துள்ளார்.
உடனே குறித்த சந்தேகநபர் துப்பாக்கியை எடுத்து வலேரியாவை சுட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.
எனினும் வலேரியாவை சுட்டுக் கொன்றவருக்கும் வலேரியாவுக்கும் எவ்வித தனிப்பட்ட உறவோ அல்லது பகையோ இருந்திருக்கவில்லை என பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெக்சிகோ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.