மருதமுனை பிரதேச உள்ளக வீதிகள் செப்பனிடப்பட்டது

மருதமுனை பிரதேச உள்ளக வீதிகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் டீ- 100 திட்டத்தின் கீழ் வீதிகள் கொங்கிறீட் வீதிகளாக செப்பனிடப்பட்டது.

மழை காலங்களில் மக்கள் பாவனைக்கு பொருத்தமற்ற அக்பர் வீதியின் குறுக்கு வீதியான “கலாபூசணம் பீ.எம்.எம்.ஏ. காதர் வீதி” மற்றும் “மக்பூலியா வீதி” ஆகியவற்றை கொங்கிறீட் வீதிகளாக புனரமைக்க சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நடவடிக்கை எடுத்திருந்தார்.

80 லட்சம் ரூபாய் செலவில் கொங்கிறீட் வீதிகளாக புனரமைக்கப்பட்டுள்ள இந்த வீதிகளை முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மேலும் இந்த பிரதேசத்தில் முன்னெடுக்கவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இந்த விஜயத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உட்பட முன்னாள் எம்.பி ஹரீஸ் இணைப்பாளர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மருதமுனை பிரதேச உள்ளக வீதிகள் செப்பனிடப்பட்டது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • Beta

Beta feature

  • Beta

Beta feature

  • Beta

Beta feature

  • Beta

Beta feature

  • Beta

Beta feature

  • Beta

Beta feature