ரமலான் ஸ்பெஷல் – நோன்பிற்கு புத்துணர்ச்சி தரும் சர்பத்
ரமலான் ஸ்பெஷல் – நோன்பிற்கு புத்துணர்ச்சி தரும் சர்பத்
ரமலான் மாதம் தொடங்கி விட்டது, அதுவும் கடும் வெயிலில் ஆரம்பித்துள்ள சூழலில் நோன்பு இருக்கும் போது உடலில் நீர்ச்சத்து குறையாமல், புத்துணர்வாக இருக்க, இஃப்தாருக்கு சில சூப்பர் ஹெல்தி சர்பத் ரெசிபிகளை செய்து பாருங்கள். ஜூஸ்கடைகளில் கிடைக்கிற மசாலா கலந்த குளிர்பானங்களை விட, வீட்டிலேயே இயற்கை பொருட்களால் தயாரித்த சர்பத் உடலுக்கு நல்லது.
பாதாம் பால் ஸ்மூத்தி
பாதாமில் மெக்னீசியம், விட்டமின் ஈ மற்றும் நார்ச்சத்து உள்ளது, அதே நேரத்தில் பாலில் கல்சியம் உள்ளது. எனவே, நீண்ட நேரம் நோன்பிற்கு பிறகு, இதை குடிப்பது நம் உடலுக்கு உடனடி சக்தியை வழங்குகிறது.
தர்பூசணி + புதினா ஜூஸ்
வெயிலால் தாகம் எடுக்கும் போது, தர்பூசணி ஜூஸ் போதும். இதில் புதினா சேர்த்தால், உடல் சூட்டை தணிக்க மட்டும் , ஜீரண சக்தியையும் கூட்டும். நோன்பு முடிந்ததும், உணவை எளிதில் ஜீரணிக்கவும் இது உதவும்.
ஸ்ட்ராபெரி மற்றும் தயிர் ஸ்மூத்தி
ஸ்ட்ராபெர்ரிகளில் விட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் தயிரில் ப்ரீபயாடிக்குகள் உள்ளன. எனவே இந்த ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்புச் சக்தி நிறைந்த சர்பத் நமது குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
இஞ்சி + எலுமிச்சை ஜூஸ்
நோயெதிர்ப்பு சக்தி நோன்பு இருந்ததால் ஏற்படும் தலைசுற்றல், மந்த நிலை ஆகியவற்றை குறைக்கும். உடலில் இன்சுலின் சரிவர இயங்க, ரத்தத்தில் சர்க்கரை அளவை சமப்படுத்த எலுமிச்சை -இஞ்சி சாறு
கலந்து குடிப்பது சிறந்தது.
வெள்ளரிக்காய் சர்பத்
வெள்ளரிக்காய், 95% நீர்ச்சத்து கொண்டது. இதை சர்பத் செய்து குடித்தால், உடலிலிருக்கும் நச்சுத்தன்மை வெளியேறி, நீர்ச்சத்து சமநிலையில் இருக்கும். கூடவே துளசி இலையை சேர்த்தால், இது அதிகம் புத்துணர்வாக இருக்கும்.