மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் முன்பாக பொதுமக்களால் இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மற்றும், காயமடைந்தவர்களுக்கு வைத்தியசாலையில் உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆரையம்பதி பிரதேச பொதுமக்களால் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 09.00 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை பெற்றுக் கொடு, சுத்தமான இலங்கையில் சூத்திரதாரிகளை ஒழி, நீதி எங்கே, வாழ்வெட்டு கும்பலை இப் பிரதேசத்திலிருந்து ஒழி, போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டகாரர்கள் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளரை நேரில் சந்தித்து இது தொடர்பான மகஜர் ஒன்றையும் கையளித்தனர். இதன் பின்னர் ஆர்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.
Beta feature