பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து

இரத்தினபுரி – குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வேன் விபத்திற்குள்ளானதில் 15 பேர்காயமடைந்துள்ளனர்.

விபத்தின் போது வேனில் சாரதி உட்பட 11 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 14 பாடசாலை மாணவர்களும் பெண் ஒருவரும் பயணித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த 14 பாடசாலை மாணவர்களும் வேனின் சாரதியும் சிகிச்சைக்காக ஏரத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 10 பாடசாலை மாணவர்கள் சிகிச்சையின் பின்னர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

2 சிறுவர்கள், 2 சிறுமிகள் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.