திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து

-மூதூர் நிருபர்-

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் பகுதியில் இராணுவ கெப் வாகனத்தின் டயர் வெடித்து கெப் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.இதில் பயணித்த இராணுவ வீரர்கள் எவ்வித காயங்களும் இன்றி உயிர்தப்பியுள்ளனர்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம் பெற்றுள்ளது.

சேருநுவ பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இராணுவ கெப்ர வாகனமே இந்த விபத்தினை எதிர்நோக்கியுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.