சர்வ மதத்தவர்களின் பங்கேற்புடன் சமாதான அருங்காட்சியகத்தில் சமாதான நிகழ்வு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

கிளிநொச்சியில் அமையப் பெற்றுள்ள சமாதான சகவாழ்வு அருங்காட்சிக் கலையரங்கில் சர்வ மதத்தவர்களின் பங்கேற்புடன் சமாதான பொங்கல் நிகழ்வுகள் நேற்று முன் தினம் ஞாயிற்றுக் கிழமை  இடம்பெற்றதாக அருங்காட்சியக திட்ட இணைப்பாளர் எம். யாழினி தெரிவித்தார்.

பௌத்த, ஹிந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயப் பெரியார்கள், செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் செயற்பாட்டாளர்கள், சமாதான சகவாழ்வு ஆர்வலர்களான நெதர்லாந்து நாட்டுப் பிரஜைகள், சமூகத் தலைவர்கள், இளைஞர் யுவதிகள் ஆகியோர் பங்குபற்றிய இந்த நிகழ்வில் சமாதான   சகவாழ்வக்கான நிகழ்வுகள் இடம்பெற்றன.

சாதி, சமய, மொழி வேறுபாடுகளைக் கடந்த ஒப்புரவும் ஒருங்கிணைவும் நிலவ வேண்டியதன் அவசியத்தை சர்வமதப் பெரியார்கள் பாரம்பரிய மத விழுமியங்களுடன் சுட்டிக் காட்டினர்.

மேலும், வன்முறைக்குப் பதிலாக நன்முறைகளைப் பயன்படுத்திக் கொண்டு சமூகங்களுடன் இணைந்து வாழ்வதற்கு இளையோர் வழி காட்டவும், வழி தேடவும் வேண்டும் என்றும் அங்கு வலியுறுத்தப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்