மட்டக்களப்பு வந்தாறுமூலை கணநாதர் அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழா நிகழ்வானது அவுஸ்திரேலியா வன்னி ஹோப் அமைப்பின் அனுசரணையிலும் வன்னி ஹோப் அமைப்பின் பணிப்பாளர் ரஞ்சன் சிவஞானசுந்தரத்தின் வழிகாட்டலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோலாகலமாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது வந்தாறுமூலை அம்பலத்தடி உழவர் சிலைக்கு முன்பாக கலை கலாசார விழுமியங்களை எடுத்து இயம்பும் நோக்குடன் கிராமிய நடன பவனி ஆரம்பிக்கப்பட்டு வந்தாறுமூலை மருங்கையடிப் பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்து தொடர்ந்து ஆலய வழிபாடு, பொங்கல் பொங்கப்பட்டு தொடர்ந்து வந்தாறுமூலை மருங்கையடிப் பிள்ளையார் தேவஸ்தான பிரதம குருக்கள் சிவ கா.ஜெயக்குமாரின் ஆசியுரை, கலை நிகழ்ச்சிகள், கௌரவிப்புக்கள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பிராந்திய பொறுப்பாளர் செல்வி. மகாதேவன் சுகன்யா, சிறப்பு விருந்தினர்களாக அவுஸ்திரேலியா வன்னி ஹோப் அமைப்பின் இலங்கைக்கான செயற்றிட்ட முகாமையாளர் து.யு.ரமேஸ்குமார், ஏறாவூர்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களான சு.சிவகுமார், திருமதி.சுபாசினி முகுந்தன், திருமதி அனுஜா மோகனதீபன், நாவற்காடு இந்து சமய கலாசார நிலைய கலாசார உத்தியோகத்தர் திருமதி ஜமுனா கிருஷ்ணப்பிள்ளை, அவுஸ்திரேலியா வன்னி ஹோப் அமைப்பின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட திட்ட இணைப்பாளர் மு.தர்மராஜ், கௌரவ விருந்தினர்களாக ஓய்வு பெற்ற அதிபரும் சமாதான நீதிவானுமான கு.சண்முகம், வந்தாறுமூலை கணேச வித்தியாலய அதிபர் சி.மதிவர்ணன், வந்தாறுமூலை மேற்கு கிராம சேவை உத்தியோகத்தர் பு.சுசிதரன் மற்றும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டருந்தமை குறிப்பிடத்தக்கது.