ஏ-9 வீதியில் காணப்படும் ஆபத்தான குழிகள் : திருத்தம் செய்யுமாறு கோரிக்கை!

-யாழ் நிருபர்-

ஏ-9 வீதியில் எழுது மட்டுவாளுக்கும்,  முகமாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய பள்ளங்கள் காணப்படுகின்றன.

இதனால் வாகனங்களைச் ஓட்டிச்செல்லும் சாரதிகள் பெரும் சிரமத்தை எதிர் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த பள்ளங்களினால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு குறித்த பாரிய பள்ளங்களை சீர் செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்