தனியார் விமானம் விபத்து: 10 பேர் பலி!

தெற்கு பிரேஸிலின் சுற்றுலா நகரமான கிராமடோவில் (Gramado) தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

அத்துடன் அதில் பயணித்த விமானத்தின் உரிமையார் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் தரையிலிருந்த 17 பேர் காயமடைந்ததுடன், 12 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரேஸிலின் கனெலா (Canela) விமான நிலையத்திலிருந்து ஜுண்டியாய் பகுதிக்குப் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விமானம் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் குறித்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகளை பிரேஸிலின் வானூர்தி விபத்து விசாரணை பிரிவு ஆரம்பித்துள்ளது.