சமய நிகழ்வு சன நெரிசலில் சிக்கி பலர் உயிரிழப்பு

நைஜீரியாவில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்குண்டு பலர் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில், ஓயோ மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய உயர்நிலைப் பாடசாலை ஒன்றிலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும், பங்கேற்பாளர்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்றுவதற்கும் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநில ஆளுநர் சேய் மகிண்டே (Seyi Makinde) தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்குக் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாக நைஜீரியாவின் தேசிய அவசரச் சேவைகள் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்