சீரற்ற காலநிலை: கல்முனையில் வீதிகள் சேதம்

சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ளக வீதிகள் சேதமடைந்துள்ளன.

மழை நீர் அதிகரிக்கும் போது குறித்த பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் அவ்வீதியூடாக அத்தியாவசிய தேவைகளுக்கு பயணம் செய்யும் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

மேற்படி வீதியினை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் சீர் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்