
-யாழ் நிருபர்-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யா ஆகிய இருவரையும், பிணையில் செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யா ஆகிய இருவரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள், கடந்த 9 ஆம் திகதி அத்துமீறி உள் நுழைந்தமை தொடர்பான வழக்கு, இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி இவ்வாறு பிணை வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தியால், குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
