
மட்டக்களப்பு போரதீவுபற்று-வெல்லாவெளி பாலத்திற்கு கீழ்பகுதியில் பல காலமாக தேங்கி நின்ற ஆற்றுவாழையை அகற்றுவதற்கான நடவடிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
பாரிய மழை வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட பல வீதிகளை இரா சாணக்கியன் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
மக்கள் மிகுந்த சிரமத்துடன் மத்தியில் தமது போக்குவரத்தினை எதிர்கொள்கின்றனர், இவ்வாறான பாவனைக்கு உதவாத வீதிகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு, உடனடியாக மக்கள் பாவனைக்கு விடப்பட வேண்டும், என்று தெரிவித்தார்.
