உழவு இயந்திரம் விபத்து: இடைநிறுத்தப்பட்ட தேடுதல் மீண்டும் ஆரம்பம்

-அம்பாறை நிருபர்-

அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் 7 பேர்களின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் இடை நிறுத்தப்பட்ட மீட்புப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இருள் சூழ்ந்த நிலை மற்றும் அதிகமான காற்று என்பவற்றால் நேற்று வியாழக்கிழமை மாலை தேடுதல் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்புப் பணிகள் ஆரம்பமாகி உள்ளது.

காணாமல் போன ஒரு மத்ரஸா மாணவனின் சடலத்தை தேடி குறித்த மீட்புப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே உழவு இயந்திரத்தின் ஊடாக சம்மாந்துறை பிரதேசத்திற்கு விடுமுறைக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட 13 பேர் வௌ்ளத்தில் சிக்கி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.