இனி எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை

எதிர்வரும் காலங்களில் தாம் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் அவர் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிருந்த போதிலும், நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருக்கவில்லை.

எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு காரணமாகவே, கடந்த பொதுத் தேர்தலில் தாம் போட்டியிட்டதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்