முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய இல்லங்களுக்கு விசேட பாதுகாப்பு!

அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய இல்லங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு அமைய முன்னாள் அமைச்சர்கள் தங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட இல்லங்கள் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் குறித்த இல்லங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது