வேட்பாளரின் வீட்டினுள் நுழைந்து குடும்பத்தினர் மீது தாக்குதல்!

-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிடும் புவனேஸ்வரன் வசந்தராஜ் என்ற வேட்பாளரின் வீட்டினுள் வன்முறைக்கும்பல்  ஒன்று அத்துமீறி உள்நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளது.
இதன் போது காயங்களுக்குள்ளான நிலையில் வேட்பாளரின் தந்தையார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை – நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள சனநாயக தமிழரசு கூட்டமைப்பு சுயேட்சை குழு  14 இன் வேட்பாளர் புவனேஸ்வரன் வசந்தராஜ்ஜின் வீட்டிற்குள், நேற்று செவ்வாய்க்கிழமை  மாலை அத்துமீறி உள்நுழைந்த வன்முறைக் கும்பல்,   தந்தையாரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய அதேவேளை, வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் மோட்டார் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளது.
மேலும் அயல் வீட்டின் மீதும் தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்ற இதேவேளை,  குறித்த வீட்டில் வசிக்கும் இளைஞரின் கை மீதும் வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப் படையினர் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்