
விசேட போக்குவரத்து சேவைகள்!
எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்களது சொந்த இடங்களுக்குச் செல்பவர்களின் வசதிகளைக் கருத்திற் கொண்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இலங்கை போக்குவரத்து சபையினால் இன்றும் நாளையும் இந்த போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படுகிறது. இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிக பயணிகள் செல்லக் கூடிய வீதிகளில் இன்று மதியம் 12 மணிமுதல் மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, இன்றைய தினம் 70 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் நாளைய தினம் 80 பேருந்துகளை மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் 1,000 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர பொலிஸாரின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 200 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்தார்.
