நானுஓயாவில் முச்சக்கர வண்டி விபத்து : இருவர் படுகாயம்!

-நுவரெலியா நிருபர்-

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிலாரண்டன் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்