சம்மாந்துறையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

-சம்மாந்துறை நிருபர்-

உழவு இயந்திரத்தில் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதன்போது மற்நொருவர் காயம் அடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை-அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மல்வத்தை பள்ளிவாசலுக்கு அருகாமையில் இன்று சனிக்கிழமை மாலை 04.15 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் சம்மாந்துறை விளினியடியை சேர்ந்த அசனார் முகம்மட் இஸ்மாயில் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

கனரக வாகனத்தை செலுத்திய சாரதியை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்