யாழில் மும்மொழியிலும் ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்த மாணவி !
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவி தரண்ஜா கோபிநாத் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தியை பெற்றுக் கொண்டதுடன் மும்மொழியிலும் அதிவிசேட திறமைச்சித்தியினை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அந்தவகையில் தமிழ் ஏ, ஆங்கிலம் ஏ, ஆங்கில இலக்கியம் ஏ, சிங்களம் (இரண்டாம் மொழி) ஏ என்ற சித்தியை பெற்றுக்கொண்டதுடன், மொத்தமாக 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.
இது ஒரு வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.
வெற்றி பெற்ற மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.