புதிதாக கட்டிய மதிலை உடைத்த விசமிகள்!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை புதிதாக கட்டிய மதிலின் ஒரு பகுதியை இனந்தெரியாத சிலர் உடைத்துள்ளதாக, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
வெற்றுக் காணி ஒன்றினை சுற்றி நேற்றையதினம் புதிதாக மதில் கட்டப்பட்டது.
இந்நிலையில், விசமிகள் சிலர் நேற்றிரவுஇ சுமார் 150 அடிகள் நீளம் கொண்ட மதிலினை உடைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.