கிரிக்கெட் விளையாடிய மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!

கொட்டகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கிரிக்கெட் விளையாடிய மாணவர் ஒருவர் தவறி வீழ்ந்து பாடசாலை கட்டடமொன்றில் மோதி உயிரிழந்தார்.

இன்றைய பாடசாலை மதிய நேர இடைவேளையின் போது இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

குறித்த மாணவன் பந்தை பிடியெடுக்க முற்பட்டு, தவறி பாடசாலை கட்டடமொன்றில் மோதிக் காயமடைந்துள்ளார்.

பின்னர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காகக் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் தலவாக்கலை – கிரேட்வெஸ்டன் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவர் ஒருவரே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.