விபத்தில் இருவர் படுகாயம்!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் விபத்து இடம் பெற்றுள்ளது.

மாமுனையிலிருந்து தாளையடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று கடற்கரை வீதியில் இருந்து உள்ளக வீதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று வடக்கு நாற்சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காயமடைந்தவர்களை அயலவர்கள் மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், அவர்கள் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கணி போக்குவரத்து போலீசார் விபத்து இடம்பெற்ற பகுதியை பார்வையிட்டதுடன், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.