முன்னாள் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்தவுக்கு எதிராக முறைப்பாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்தவுக்கு எதிராக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் சீனாவின் முன்னாள் இராஜதந்திரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே முறைப்பாடு செய்யப்பட்டது.

முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக குற்றம் மற்றும் இலஞ்ச வழக்குத் தாக்கல் செய்ததன் காரணமாக பியால் நிஷாந்த தன்னை பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்