நாட்டை வந்தடைந்தார் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்று வெள்ளிக்கிழமை காலை நாட்டை வந்தடைந்தார்.

அவர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார், அத்துடன் அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது கடந்த காலங்களில் இந்திய – இலங்கை கூட்டு முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட மற்றும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்