தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தால் இடமாற்றம் – பழிவாங்கும் செயற்பாடா?

-யாழ் நிருபர்-

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆளுநர் செயலகத்தில் கடமையாற்றிய ஆளுநர் செயலக காணி உதவி ஆணையாளர், அபிவிருத்தி உதவியாளர் மற்றும் சாரதி ஒருவருக்குமாக குறித்த இட மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இடமாற்றங்களை முன்னாள் ஆளுநரின் செயலாளரும் தற்போதைய ஆளுநரின் செயலாளருமான நந்தகோபன் அறிவுறுத்தலின் பிரகாரம் வழங்கப்டுவதாக அறியக் கிடைக்கிறது.

இருந்தும் தற்போதைய ஆளுநரின் செயலாளர் நந்தகோபனை மாற்றி கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் முரளிதரனை தனது செயலாளராக நியமிப்பதற்கு ஆளுநர் விருபம்புவதாக அறியக் கிடைக்கிறது.

வட மாகாண புதிய ஆளுநராக வேதநாயகன் பொறுப்பேற்று ஒரு வாரம் முடிவதற்கு முன்னர் குறித்த விட மாற்றங்கள் வழங்கப்பட்டமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்