பாடசாலையொன்றில் தீ விபத்து:17 மாணவர்கள் பலி

கென்யாவில் உள்ள பாடசாலையொன்றில் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நைரியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா என்ற ஆரம்பப் பாடசாலையொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டுக் பொலிஸார் தெரிவித்துள்ளது.

இதேவேளை பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்