மட்டு. செட்டிபாளையத்தில் விபத்து: ஒருவர் காயம்
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை 12 மணியளவில்இடம்பெற்ற விபத்தில் ஒருவர்காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பகுதியில் இருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காரும் களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து செட்டிபாளையம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுமே செட்டிபாளையம் கட்டுப்பிள்ளையார் ஆலய வளைவுக்கு முன்னால் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் செட்டிபாளையத்தை சேர்ந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

