
5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
62 போலி 5000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹேனேகம, அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடையவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலுவன வீதி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
