ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்த நண்பர்களை காணவில்லை!
ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இரண்டு பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக, ராகம பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராகம படுவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 11 மற்றும் 13 வயதுடைய இரு மாணவர்களே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன மாணவர்கள் இருவரும் கடந்த 04 ஆம் திகதி ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்துள்ள நிலையில் திடீரென காணாமல் போயுள்ளதாக அவர்களது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
