மாதகல் கடலில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் மாதகல் கடலில் நேற்று புதன்கிழமை காணாமல் போன இளைஞன் இன்று வியாழக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாதகல் பகுதியை சேர்ந்த நாகராஜா பகீரதன் என்ற (வயது 21) இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாதகலில் இருந்து கடற்றொழிலுக்கு  இரண்டு இளைஞர்கள் நேற்று அதிகாலை இவ்வாறு கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர், அவர்கள் பயணித்த படகு திடீரென விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் படகில் பயணித்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த வேளை, அருகே வந்த படகின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளார், மற்றைய இளைஞர் காணாமல் போனார்,  இவ்வாறு காணாமல் போனவரின் சடலம் இன்று கரையொதுங்கியது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்