
வெட்டுப்புள்ளி வெளியிடும் திகதி: முக்கிய அறிவிப்பு
2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த நடவடிக்கைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் இந்த வருடம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்திற்கும் அதிகமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
