திருகோணமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருக்கோணேச்சர ஆலயத்தின் இதுவரை நிர்மாணிக்கப்படாத கோபுரம் நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்தார்.
இந்துக்களின் பிரசித்தி பெற்ற இந்த திருக்கோணேஸ்வர ஆலயமானது உலக இந்துக்கள் அனைவரும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் ஆலயம் என்பதுடன் இந்த திருககோணேஸ்வர ஆலயத்தின் கோபுரமானது இதுவரை காலமும் நிர்வாணம் செய்யப்படாமல் உள்ளது எனவே குறித்த திருக்கோனேஸ்வரர் ஆலயத்தின் கோபுரம் நிர்மாணிப்பதற்கான பொறுப்பை எமது அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது எனவும் குறித்த ஆலயத்தின் கோபுரத்தை நிர்மாணிக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்தார்.
மேலும் இதனை தெரிவிக்கும் போது எனக்கு காலம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்கள் ஞாபகத்திற்கு வருகிறார் சம்பந்தன் அவர்கள் தொடர்ந்து என்னை வலியுறுத்தி வந்தார் திருகோணமலை நகரை பெரிய அளவில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் அதனை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன் என அவருக்கு நான் வாக்குறுதியளித்திருந்தது எனக்கு ஞாபகம் வந்தது,
எனவே நாங்கள் வாக்குறுதியளித்தால் அதை நிறைவேற்றியே தீருவோம் என இதன் போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மேலும் திருகோணமலையில் அமைந்துள்ள சேருவில விகாரையின் புனர்நிர்மான பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு சேருவில விகாரை புனரமைக்கப்படும் என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்