28 வைத்தியர்கள் கல்முனை பிராந்தியத்துக்கு சுகாதார அமைச்சினால் நியமனம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களில் கடமையாற்றும் பொருட்டு புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட வைத்தியர்களில் 28 பேர் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமனம் பெற்ற வைத்தியர்களுக்குரிய சேவை நிலையங்களுக்கான கடிதங்கள் கையளித்தல் மற்றும் அறிமுக நிகழ்வு என்பன இன்று செவ்வாய்க்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

இதன்போது வைத்திய அத்தியட்சகர்கள் மற்றும் பிரிவுத் தலைவர்கள் தத்தமது பிரிவு தொடர்பான விபரங்களையும் பணிமனை மற்றும் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படுகின்ற சேவைகள், செயற்றிட்டங்கள் தொடர்பான விபரங்களையும் வழங்கினர்.

கல்முனை பிராந்தியத்துக்கு இம்முறை அதிமான வைத்தியர்கள் நியமிக்கப்பட்டதனையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்தும் பொருட்டு, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் மேலதிகமாகவும் இரண்டு வைத்தியர்களை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்