மீன் ஏற்றிச் சென்ற வாகனம் மற்றும் இ.போ.ச பேரூந்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

மீன் ஏற்றிச் செல்லும் வண்டி மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மோதியதில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி வழியே அக்கரைப்பற்று பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும், மட்டக்களப்பு கல்முனை வீதி வழியாக வந்த சிறிய ரக மீன் ஏற்றிச் செல்லும் வண்டியும், இந்த விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளதுடன் பேருந்து பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.

இதன் போது இவ்விரு வாகனத்தினையும் செலுத்தி சென்ற சாரதிகள் காயமடைந்த நிலையில் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் விபத்து இடம்பெற்ற வேளை மழை அப்பகுதியில் பெய்து கொண்டிருந்ததாகவும், வளைந்து செல்லும் பிரதான வீதியில் சிறிய ரக மீன் ஏற்றிச் செல்லும் வண்டி வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணித்த வேளை இவ்விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்