மட்டக்களப்பில் வாகன விபத்து: இருவர் படுகாயம்

-களுவாஞ்சிகுடி நிருபர்-

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி நோக்கி பயணித்த இரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று பின்பக்கமாக மோதியே விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விவத்து தொடர்பான விசாரணையை களுவாஞ்சிடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்