மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக்கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம்

ஈழமணித்திருநாட்டின் கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு குருக்கள்மடம் ஶ்ரீலஶ்ரீ செல்லக்கதிர்காம ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இன்று காலையில் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகிய கிரியை நிகழ்வுகளை தொடர்ந்து, யாக பூஜை இடம்பெற்று, முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராய் கொடித்தம்பத்திற்கு முன் எழுந்தருளினார்.

அதன்பின் திருக்கொடியேற்றம் இடம்பெற்றது.

அரோகரா கோஷங்கள் முழங்க, வேதபாரயணங்கள் ஒலிக்க, வெகுவிமர்சையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ கொடியேற்றம் இடம்பெற்றது

இக் கிரியை நிகழ்வுகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஶ்ரீ நவரத்தின முரசொலி மாறன் தலைமையிலான குருமார் குழுவினால் இடம்பெற்றது.

இவ் மகோற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் இடம்பெறும்

இவ்விழாவில் எதிர்வரும் 17 ம் திகதி சனிக்கிழமை முத்துரசப்புரத் திருவிழாவும், திருவேட்டைத் திருவிழாவும், 18 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சித்திரதேராட்டமும், 19 ம் திகதி திங்கட்கிழமை திருவோண நட்சத்திரத்துடன் கூடிய பூரணையில் சமுத்திரா தீர்த்தோற்சவத்துடன் விழா இனிதே நிறைவு பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்