
பிரேசிலில் விமான விபத்து : 61 பேர் பலி
பிரேசிலின் சாவோ பாவ்லோ மாநிலத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 61 பேரும் உயிரிழந்துள்ளதுடன் விபத்தின் போது வீடொன்றும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரேசிலின் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாவ்லோ நோக்கிப் பயணித்த இரட்டை இயந்திரத்தைக் கொண்ட ஏ.டி.ஆர் 72-500 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானத்தில் 57 பயணிகளும் நான்கு பணியாளர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சாவோ பாவ்லோ மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பிரான்ஸ் – இத்தாலிய விமான தயாரிப்பு நிறுவனமான ஏ.டி.ஆர் நிறுவனம், இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
